Monday, June 6, 2011

பாதுகாப்பான முதலீடு

        காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது பழமொழி. ஆடி, ஓடி சம்பாதிக் கின்ற காலத்தில், ரிடையர் ஆன பின், வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்காத வர்கள் யார்? முன்பெல்லாம் சேமிப்புப் பழக்கம் அவ்வளவாக இல்லை. இப்போதுதான் வங்கிகள், அஞ்சலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் முனைகிறார்கள்.
ஆனால், வங்கிகள் அல்லாத தனியார் நிறுவனங்களில் “கவர்ச்சிகரமான” வட்டிக்கு அல்லது ஈட்டுத்தொகைக்கு (Dividend) ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்வது ஆபத்தானது. அஞ்சல் துறையில் இந்திர விகாஸ் பத்திரம், கிசான் பத்திரம், மாதாந்திர வட்டி (Monthly Incom Scheme) திட்டம் என்று இப்படி ஏதாவது ஒன்றில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானது. நம் பணம் முதிர் காலம் முடிவடைந்ததும் திரும்ப நம் கைக்கு வந்து சேரும்.
வரையறுக்கப்பட்ட வங்கிகள் தேசிய வங்கிகள் (Scheduled, Nationalised Banks) தற்சமயம் ஆண்டுக்கு 8.5 சதவீகித வட்டி தருகின்றன. மூத்த குடிமகன்களுக்கு 0.5 வும் கூடுதல். 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என்று தொகுப்பு ஊதிய திட்டத்தில் (Cumilative Deposit) அல்லது மாதவட்டி கிடைக்கும் திட்டத்தில் முதலீடுசெய்யலாம். டி.வி.எஸ்.சுந்தரம் பைனான்ஸ் போன்றநிறுவனங்களும் நம்பகமானவை தான். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி விளைவாகத் தனியார் நிறுவனங்களில் நம்பகத் தன்மை குறைந்து போய்விட்டது.
கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை விளம்பரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைகைய பொதுமக்களிடமிருந்து முதலீடாகப் பெற்றபின், நிறுவனங்களைப் பூட்டிவிட்டு, மக்களை மோசடி செய்து தலைமறைவாகி விடுகிறார்கள். இதனால் ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
பங்குச் சந்தையும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகியல் பொருளாதார தேக்க நிலையும் இதற்கு ஒரு காரணம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, பங்குச் சந்தையைப் பற்றி நன்கு தெரிந்த, சந்தையில் அதன் ஏற்ற, இறக்கத்தை நன்கு கண்காணித்து, அதற்கேற்ப சாதுர்யத்துடன் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பதில்லை. சந்தை அதிக புள்ளி பெறும் என்று நீண்டகாலம் காத்திருப்பவர்கள் தான், திடீரென அது வீழ்ச்சி அடைந்ததும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் பலர் தற்கொலைகூடச் செய்து கொண்டார்கள்.
2006-07 நிலவரப்படி வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்த தொகை ரூபாய் 6,246,65 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டுத் தொகைக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமோ, காப்பீட்டுத் தொகையோ இல்லை. இது ஒரு மைனஸ் பாய்ன்ட். தவிர சமீபத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவும் வங்கிகள் அல்லாத நிறுவன முதலீட்டாளர்களுக்கு எவ்வித மான உத்தரவாதமும் இல்லையென்று வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி தான்.
இம்மாதிரி நிறுவனங்களில் போடப்பட்ட பணம் திரும்பக் கிடைக்காவிடில் அதைத் திரும்பப்பெற ஆம்புட்ஸ்மென் போன்ற விசாரனை நீதிமன்றங்கள் கிடையாது என்பது ஒரு கவலைதரும் அம்சம்.
பின் எப்படித் தான் போடப்பட்டத் தொகையைத் திரும்பப் பெறுவது. இதனால் பெரும் பாலான வங்கிகள் அல்லாத நிறுவனங் கள் கோடிக்கணக்கில் டிபாசிட்தாரர்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, அந்த நிறுவனங்களையே மூடிவிட்டு ‘கூலாக’ தலைமறைவாகி விடுகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக இம் மாதிரி மோசடிகள் பற்றி 500க்கு மேற்பட்ட புகார்கள், வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், டிபாசிட் தாரர்களுக்கு முழு அளவு நிவாரணம் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்.
“சி.ஆர்.பி.” போன்ற நிறுவனங் களின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்ததும், ரிசர்வங்கி விழித்துக்கொண்டு, இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் விஷயமாக பல்வேறு ஒழுங்கு முறைக்கட்டுப்பாடுகளை வரையறுத்தது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தனது பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டது என்று தெரிந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனே நிவாரணம் கோரி, கம்பெனிச் சட்ட வாரியத்தில் புகார் மனு தாக்கல் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
உங்களது டிபாசிட் ரசீதின் நகல் காப்பியுடன் கம்பெனி சட்ட வாரியத்திற்குப் புகார் செய்யலாம். அதற்கான கட்டணம் ரூ. 50-ஐ வரைவு ஓலையாக இந்த வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தப் புகார் மனு படிவத்தை நீங்கள் வலைதளம் www.இன்வெஸ்டர் ஹெல்ப் லைன் in/ih/General/CLB htm#ஹப்க்கு அனுப்பிப் பெறலாம்.
அம்மாதிரி நீங்கள் செய்ய விரும்ப வில்லை என்றால் உயர்நீதி மன்றத்தில் மோசடி நிறுவனத்தின் மீது ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடலாம். நீதிமன்றத்தில் சிவில் வழக்கு போட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. காலதாமதம் ஆகும். வழக்கு இழுத்தடித்துக் கொண்டே போவதற்கு வாய்ப்பு உண்டு. செலவும் அதிகம். உடனுக்குடன் பரிகாரம் காண முடியாது. இது ஒரு சிக்கல்தான்.
ஆகவே, நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகுவது தான் உடனடியாக நிவாரணம் கிடைக்க ஏதுவாகும். விரைவில் வழக்கும் பைசலாவதுடன், செலவும் குறைவு. மனுதாரருக்குப் பெருமளவு நிவாரணம் கிடைப்பதும் இதில் ஆதாயமான விஷயம்.
முதலீட்டாளர் ஹெல்ப்லைன் மத்திய அமைச்சகத்தின் கம்பெனி விவகாரத் துறையின் பரிகார வழிமுறையாகும். சர்வதேச நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் கவுன்சிலும் உதவக்கூடும். இது ஒரு லாபமற்ற, உரிமை பாதிப்பு அமைப்பாகும்.
பாதிக்கப்பட்ட டிபாசிட்தாரர் மோசடி நிறுவனத்தின்மீது, முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச நுகர்வோர் பாது காப்புக் கவுன்சிலரின் விதிமுறையின்படி இந்த நபர் தன்னைப்போல் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களது பெயர்களை ஊடகங்களிலிருந்து அல்லது போலீசாரிடமிருந்து பெற்று, கூட்டாக (Joint Petition) மனு செய்யலாம். அதாவது வழக்குகளையும் ஒருசேர விசாரித்து விரைவில் பைசல் செய்து, நிவாரணம் தர இந்தக் கவுன்சில் ஆவண செய்யும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, மோசடி செய்த கம்பெனிக்கு, உங்களது முதலீட்டுப் பணத்தை உரிய வட்டி யுடன் திரும்பத்தருமாறு கடிதம் எழுதுங்கள். இதற்கு உடனடியாக பதில் வரவில்லையென்றால், அல்லது கம்பெனியின் பதில் திருப்தி அளிக்க வில்லை என்றால், கம்பெனிச் சட்டவாரியத் திற்கும், போலீசாருக்கும் உங்கள் டிபாசிட் பற்றிய உடனடியாக புகார் செய்து, வழக்கைப் பதிவு செய்யவும். உங்களது முதடலீட்டுப் பணம்
ரூ. 2 லட்சத்துக்கு மேல் இருக்குமானால் குற்றப் பிரிவு போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மனுச் செய்யவும்.
நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கவுன்சிலை அணுகி நிவாரணம் பெறுவது எளிது. செலவும் குறைவு. அத்துடன் வழக்குச் செலவு தொகையையும் நீங்கள் பெறலாம்.
கம்பெனிச் சட்டவாரியத்தில் எப்படி மனு செய்வது?
நீங்கள் வசிக்கும் பகுதி, யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும், என்பதற்கு இந்தப்பட்டியல் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
ப் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை, லட்சத்தீவுகள்.
கம்பெனிச் சட்டவாரியம், தென் பிராந்திய பிரிவு, சாஸ்திரி பவன், ஏ – விங். எண் 26, ஹாடோஸ் சாலை, சென்னை – 6.
ப் பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தில்லி, சண்டிகார், ஹிமாசல பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான்.
வடக்குப் பிராந்தியம், சாஸ்திரி பவன், ஏ – விங், 5வது தளம், டாக்டர், ஆர்.டி. சாலை,
தில்லி – 1.
ப் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா, தியு, தாமன், நகர்ஹவேலி.
மேற்கு பிராந்தியம், என்.டி.சி. ஹவுஸ் 15-என், மொரார்ஜி மார்க், பல்லார்டு எஸ்டேட், மும்பை – 38.
ப் மேற்கு வங்காளம், ஒரிசா, பீகார், அந்தமான், நிகோபார், அஸ்ஸாம், வடகிழக்கு இந்தியா.
கிழக்கு பிராந்தியம், 9 பழைய அஞ்சல் அலுவலகக் கட்டடம், 6வது தளம், கொல்கத்தா – 700 001.